டெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்த லண்டன் சென்ற தனியார் நிறுவன விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த விமானம் ஃபிராங் பர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவத 36ஆக உயர்ந்துள்ளது.
சமீப நாட்களாக, இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் விமானம், ரயில் போன்றவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. அதுபோல ரயிலை கவிழ்க்கும் நடவடிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மட்டும் இந்திய விமானங்களுக்கு வந்துள்ள வெடிகுண்டு மிரட்டல் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 5 நாட்களில் 36 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த மிரட்டல் மெசேஜ் அல்லது இமெயில் மூலம் கிட்டத்தட்ட 34 விமானங்களுக்கு வந்துள்ளது. நேற்று மட்டும் 15 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இன்று விஸ்தாரா தனியார் விமான நிறுவனத்தின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற விஸ்தார நிறுவன விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. விஸ்தாரா விமானம் UK17 ல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக, சமூக ஊடகங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தலைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, நெறிமுறைக்கு இணங்க, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானத்தை பிராங்பேர்ட்டுக்கு திருப்பிவிட விமானிகள் முடிவு செய்தனர், அதன்படி, விமானம் பிராங்பர்ட் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது மற்றும் கட்டாய சோதனைகள் நடத்தப்பட்டன. பாதுகாப்பு ஏஜென்சிகள் அனுமதித்தவுடன் விமானம் அதன் இலக்கை நோக்கித் தொடரும் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினா
இதையடுத்து அந்த விமானம் ஜெர்மனியின் உள்ள ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் தரையிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்து பயணிகள் உடனே வெளியேற்றப்பட்டு, விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதி செய்ப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் விமான பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன்பு, ‘விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலே வந்ததில்லையா?’ என்று கேட்டால், ‘வந்திருக்கிறது… ஆனால், தற்போதுபோல தொடர் மிரட்டல்கள் வந்தது இல்லை. கடந்த 14ந்தேதி ம்பையில் இருந்து கிளம்பும் மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அதை ஒரு சிறுவன் விடுத்ததை கண்டு பிடித்தனர். விசாரணையில், மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்களைவிடுத்தது சண்டிகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதுபோன்ற மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்திய விமானங்களுக்கு கடந்த 5 நாட்களில் மட்டுமே 36 மிரட்டல்கள் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மிரட்டல் தொடர்பாக 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். மேலும், இந்த மிரட்டல்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விமான பயணிகள், பங்குதாரர்கள் மற்றும் தொழில் பார்டனர்கள் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்வதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும். பயணிகளின் பாதுகாப்பே எங்களுக்கு மிக முக்கியம்” என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.