டெல்லி

மிழக காவல்துறையினர் உச்சநீதிமன்றத்தில் நடக்கும் ஈஷா தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை ஈஷா மையத்தில் யோகா படிக்கசென்ற தனது 2 மகள்களையும் பார்க்க முடியவில்லை என்று, வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணையின் போது ஈஷா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்று கேள்வி எழுப்பியது.

உச்சநீதிமன்றத்தில் ஈஷா மையம் மேல்முறையீடு செய்ததால். வழக்கை விசாரித்த ஈஷா மையம் தொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தடை விதித்து காவல்துறையினரை பதில் அளிக்க உத்தரவிட்டது.  இன்று இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் தமிழக காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில்,

‘ஈஷா மையத்துக்கு சென்ற பலர் காணவில்லை. காவல்துறையில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. ஈஷா மைய வளாகத்தில் தகன மேடை செயல்படுகிறது. ஈஷா மையத்தில் உள்ள மருத்துவமனையில் காலாவதியான மருந்து – மாத்திரைகள் வழங்கப்படுகின்றன’

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.