சென்னை
இன்று அதிகாலை வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு வடக்கே கரையக் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. எனவே சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது .
இன்று அதிகாலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
மேலும் மேற்கு வட மேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகத்தின் பகுதியில் மேல் தற்போது நிலவி வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
[youtube-feed feed=1]