டெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

**EDS: VIDEO GRAB VIA @INCIndia** Ramban: Leader of Opposition in Lok Sabha and Congress MP Rahul Gandhi addresses a public meeting ahead of Jammu and Kashmir Assembly elections, in Ramban, Jammu, Wednesday, Sept. 4, 2024. (PTI Photo)(PTI09_04_2024_000093B)

நேற்று ஸ்ரீநகரில் காஷ்மீர் முதல்வராக பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் டி ராஜா, தி.மு.க. எம்.பி. கனிமொழி, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவுக்குப் பிறகு ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் ,

“முதல்வர்ரி உமர் அப்துல்லாவுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள். இருப்பினும், மாநில அந்தஸ்து இல்லாத அரசு அமைப்பது இன்று முழுமையடையாததாக உணரப்பட்டது.

காஷ்மீர் மக்களிடமிருந்து ஜனநாயகம் பறிக்கப்பட்டது, மாநில அந்தஸ்து முழுமையாக மீட்கப்படும் வரை எங்கள் போராட்டத்தைத் தொடருவோம் என்ற உறுதிமொழியை இன்று புதுப்பிக்கிறோம்”

எனப் பதிவிட்டுள்ளார்.