மும்பை: மும்பை அந்தேரியில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையின் அந்தேரி அந்தேரி மேற்கில் உள்ள லோகந்த்வாலா பகுதியில் உள்ள ரியா பேலஸ் என்ற 14 மாடிகளைக் கொண்டு அடுக்குமாடி கட்டித்தின் 10வது தளத்தில் இன்று காலை 8 மணியளவில் தீ பிடித்துள்ளது. இதுகுறித்து உடனே தீயணைப்பு துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், அந்த கட்டிடத்தில் இருந்தவர்களை மீட்பதிலும் தீயை அணைப்பதிலும் தீவிரம் காட்டினார். காலை 9 மணியளவில் தீயை கட்டுப்படுத்த முடிந்தது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், தீ விபத்தில் சிக்கிய 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அந்த கட்டிடத்தில் வசித்து சந்திரபிரகாஷ் சோனி (74), காந்தா சோனி (74) மற்றும் பெலுபேட்டா (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து அந்தேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.