லட்சுமிநரசிம்மர் கோவில். பழைய சீவரம், காஞ்சிபுரம்

00 ஆண்டுகளுக்கு முன், வடஇந்தியாவிலிருந்து பக்தர்கள் இங்கு வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. இங்கு தங்கிய போது, அவரின் கனவில் தோன்றிய பெருமாள், இங்கேயே 48 நாட்கள் தங்கி வழிபாடு செய்ய நோய் நீங்கும் என அருள்புரிந்தார.  அவரும் அதன்படி தங்கி வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். அவருடைய பரம்பரையில் வந்தவர்களே அறங்காவலர்களாக இன்றும் இருந்து வருகின்றனர்

ஆப்பரேசன் செய்ய இருப்பவர்கள் மருத்துவமனை செல்லும் முன் இங்கு வந்து தரிசிக்கின்றனர். நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரோக்கியம் பெற லட்சுமி நரசிம்மரை வீட்டிலிருந்த படியே வேண்டிக் கொள்ளலாம். இவர்கள் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜபித்தபடியே மருந்து உண்டால், நோய்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. பாவம் காரணமாகவே நோய்கள் வருகின்றன. இந்த மந்திரத்தை ஜெபித்து, நல்லதை மட்டுமே செய்தால் நோய்கள் தங்கள் பரம்பரைக்கும் வராமல் தடுக்கலாம்

திருவிழா:

நரசிம்ம ஜெயந்தி, ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, ஸ்ரீராமநவமி, வைகுண்டஏகாதசி.

தல சிறப்பு:

லட்சுமி நரசிம்மர் இடது கையால் லட்சுமியை அணைத்தபடி உள்ளார்

பொது தகவல்:

மூலவர் லட்சுமிநரசிமமர் மேற்குநோக்கி வீற்றிருக்கிறார். கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும்,வலக்கரத்தால் அபயம் அளித்தும், இடது கையால் லட்சுமியை அணைத்தபடியும் உள்ளார் அகோபிலவல்லி தாயார் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள் ஆண்டாள், நிகமாந்த மகாதேசிகன்,வீர ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. பிரதோஷம், சுவாதி நட்சத்திர நாட்களில் இவரை தரிசிப்பது சிறப்பு
தினமும் இருகால பூஜை நடக்கிறது,

பிரார்த்தனை

நாள்பட்ட நோயால் சிரமப்படுபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

துளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்

தல வரலாறு:

இமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசிமுனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத ÷க்ஷத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. வெங்கடாஜலபதி வீற்றிருக்கும் திருமலைக்கு தெற்கிலும், பாடலாத்ரிக்கு மேற்கிலும் இருக்கும் பத்மகிரி என்னும் மலைக்குச் செல். அந்த மலை யட்சர், கின்னரர், கந்தர்வர்களால் வழிபாடு செய்யப்பட்ட பெருமை மிக்கது.

அங்கு வழிபட்டால் லட்சுமி நரசிம்மரின் தரிசனம் கிடைக்கும், என்றது. அத்ரி பத்மகிரியை அடைந்தார். அங்கு கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து கொண்டு வந்த தாமரை மலர் பூத்த குளத்தைக் கண்டார். அதன் கரையில், இருந்த அரசமரத்தடியில் தவத்தில் ஆழ்ந்தார். அவரின் பக்திக்கு மகிழ்ந்த, விஷ்ணு, லட்சுமிதாயாரை மடியில் அமர்த்திய கோலத்தில் சாந்த நரசிம்மராக காட்சியளித்தார். அதே கோலத்தில் இன்றும் கோயில் கொண்டிருக்கிறார். விஷ்ணு லட்சுமியோடு வாசம் செய்யும் தலம் என்பதால் ஸ்ரீபுரம் எனப்பட்ட இத்தலம் சீவரம் என மாறியது. பழமையான ஊர் என்பதால் பழைய சீவரம என பிற்காலத்தில் மருவியது. ஸ்ரீ என்றால் லட்சுமி. பிரம்மாண்ட புராணத்தில் இக்கோயில் வரலாறு உள்ளது

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்:லட்சுமி நரசிம்மர் இடது கையால் லட்சுமியை அணைத்தபடி உள்ளார்

இருப்பிடம் :

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் சாலையில் பழையசீவரம் 10 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ.