2024ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கொரிய எழுத்தாளர் ஹான் காங்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவம், இயற்பியல் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 2024 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவை சேர்ந்த ஹான் காங்(Han Kang) (53) என்ற எழுத்தாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் அகாடமி அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel