மும்பை: வெற்றியை தோல்வியாக மாற்றும் கலையை காங்கிரஸிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று  காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான  உத்தவ் தாக்ரேயின் பத்திரிகையாக  சாம்னா விமர்சனம் செய்துள்ளது.

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருந்தும், அதை முறையாக பயன்படுத்த தவறியதால், காங்கிரஸ் கட்சியும், ஆம்ஆத்மி கட்சியும்  தோல்வி அடைந்தது. இதனால் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இது குறித்து  காங்கிரஸ்எ கூட்டணி கட்சியான உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக, இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ் அணி) கட்சி பத்திரிகையான சாம்னா பரபரப்பு தலையங்கம் எழுதியுள்ளது. அதில்,  ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்முடிவுகள் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளன.

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சிக்குஏற்பட்ட தோல்விக்கு அதீத தன்னம்பிக்கை காரணம். அங்கு பாஜக ஆட்சியை பிடிக்கும் என யாரும் கூறவில்லை. அங்கு காங்கிரஸ் வெற்றி பெறும் சூழல் இருந்தது.   ஹரியானாவில் பாஜக.வுக்கு எதிரான சூழல் நிலவியது. அங்கு பல கிராமங்களில் பாஜக அமைச்சர்கள் நுழைய முடியாத நிலை இருந்தது. ஆனாலும், முடிவுகாங்கிரஸ் கட்சிக்கு எதிராக அமைந்து விட்டது.

 மக்களின் மனநிலையை சரிவர பயன்படுத்த காங்கிரஸ் கட்சி தவறியது. சாதகமான சூழலை காங்கிரஸ் கட்சியால் முறையாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இதனால் தோல்வியை சந்தித்துள்ளது.  வெற்றியை எப்படி தோல்வியாக்க வேண்டும் என்ற கலையை காங்கிரஸிடமிருந்துதான் கற்க முடியும்.  ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் நடக்கிறது

முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங்ஹுடா மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் குமாரி செல்ஜாவை அவமானப்படுத்தினர். இதை காங்கிரஸ் மேலிடத்தால் தடுக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தால், ஹரியானாவில் பாஜக வென்றுள்ளது.

இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டிருந்தது.

சாம்னாவின் விமர்சனம் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில்,  உத்தரவ் தாக்கரேவின் நெருக்கிய தலைவரான, சிவசேனாவின்  மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘ஹரியானாவில் தனித்து வெல்ல முடியும் என காங்கிரஸ் நினைத்தது. அதனால்அங்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடாமல் தோல்வியடைந்துள்ளது.

சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, மற்றும் இதர கட்சிகளுடன்தொகுதி பங்கீடு செய்திருந்தால், தேர்தல் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட விரும்பினால், அதை கூட்டணி கட்சியினரிடம் தெளிவாக அறிவிக்க வேண்டும். ஹரியானாவில் பாஜக போராடிய விதம் அருமை’’ என்றார்.