மும்பை

காராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மறைந்த ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ‘எக்ஸ்’ தளத்தில்,

 “ஒரு அரிய ரத்தினத்தை இழந்துவிட்டோம். அடுத்த தலைமுறை தொழில் முனைவோருக்கு ரத்தன் டாடா எப்போதும் முன்மாதிரியாக இருப்பார். ரத்தன் டாடா கடந்த 1991-ல், டாடா குழுமத்தின் தலைவரானார். அவரது பதவிக் காலத்தில், டாடா குழுமம் கணிசமாக விரிவடைந்தது. மேலும் பல்வேறு தொழில்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். எப்போதும் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அவரது முடிவுகளும், துணிச்சலான அணுகுமுறையும், சமூக அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவில் நிற்கும்”

என்று பதிவிட்டுள்ளார்.

ரத்தன் டாடாவின் உடலுக்கு முதல்வர்ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம், ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அவரது உடலுக்கு மராட்டிய மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.