ட்காம்

மர் அப்துல்லாஜம்மு காஷ்மீரின் பட்காம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் ஆணையம் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என அறிவித்து இருந்தது. முதல்கட்ட தேர்தல் செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் செப்டம்பர் 25-ந்தேதியும் நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தல் கடந்த 1-ந்தேதி நடைபெற்று முடிந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவருமான உமர் அப்துல்லா பட்காம், கந்தர்பால் ஆகிய 2 தொகுதிகளில் களம் கண்டுள்ளார்.

பட்காம் தொகுதியில் உமர் அப்துல்லா 36,010 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) வேட்பாளர் அகா சையத் மண்டாஸிர் மேத்தி 17,525 வாக்குகள் பெற்று 2ம் இடத்தை பெற்றுள்ளார்.

கந்தர்பால் தொகுதியிலும் உமர் அப்துல்லா முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  உமர் அப்துல்லாவின் தந்தையும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா பேசுகையில், ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக மீண்டும் உமர் அப்துல்லா பதவியேற்பார் என்று தெரிவித்துள்ளார்.