டெல்லி:  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர்  தேர்தல் முடிவு தாமதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதாக காங்கிரஸ் தரப்பில் அகில இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிவுகளை இணையதளத்தில் தாமதமாக பதிவேற்றுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி முறையீடு செய்துள்ளது.  காங்கிரஸ் எம்.பி. கபில் சிபல்  இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அவசர கடிதம் எழுதி உள்ளார். அதில்,  தேர்தல் முடிவுகளை உடனடியாக பதிவேற்றம் செய்ய உத்தரவிட வலியுறுத்தி  உள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் தகவல் தொடர்பு, ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் ஆணையத்திடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்துள்ளார், அதில், தேர்தல் ஆணைய இணைய தளத்தில்  “தவறான செய்திகள் மற்றும் தீங்கிழைக்கும்  தகவல்கள் பதிவிடப்பட்டு வருவதாகவும்,  உண்மையான மற்றும் துல்லியமான புள்ளிவிவரங்களுடன்” வலைத்தளத்தை புதுப்பிக்க அதன் அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவுகளை வழங்குமாறு வலியுறுத்தி உள்ளார்.