சென்னை: திமுக ஆட்சியில்  சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில்  அதிமுக தொண்டர்கள் கலந்துகொள்ளாத நிலையில் நிர்வாகிகள் மட்டுமே போராட்டத்தில் கலந்துகொண்டனர். இது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசுக்கு எதிராக  இன்று அ.தி.மு.க.  சார்பில்  மனிதச் சங்கிலி போராட்டம்   அறிவிக்கப்பட்டது.  அதன்படி, அ.தி.மு.க.வில் உள்ள 82 மாவட்ட செயலாளர்களும் இன்று தங்களது பகுதியில் மனித சங்கிலி போராட் டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் கலந்துகொள்ளாத நிலையில், குறைந்த அளவிலேயே அதாவது குறைந்த பட்சம் 10 முதல் 25 வரையிலான நபர்களைக்கொண்டே,   தி.மு.க. அரசுக்கு எதிராக அதிமுக மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டத்தின்போது திமுக அரசுக்கு  கண்டன கோஷங்களையும் எழுப்பினார்கள்.

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்குட்பபட்ட 200 வார்டுகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது.

ராயபுரம் எம்.சி. ரோடு சுழல் மெத்தை பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலரும் பங்கேற்று கை கோர்த்து நின்றனர்

வில்லிவாக்கம், கொளத்தூர் உள்பட 7 இடங்களில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் பாபு பங்கேற்றார். இங்கும் அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா தலைமையில் கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே திரளான தொண்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்பகுதியில் மொத்தம் 14 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அண்ணாநகர் மண்டல அலுவலகம் அருகில் பகுதி செயலாளர் தசரதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் திரண்ட அ.தி.மு.க. வினர் நீண்ட தூரம் மனித சங்கிலியில் கைகோர்த்து நின்றனர்.

சென்னை வால்டாக்ஸ் ரோடு மண்டல அலுவலகம் அருகில் நடைபெற்ற மனித சங்கிலியில் மாவட்ட செயலாளர் பாலகங்கா மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலாளர்கள் ஆதிராஜாராம், வேளச்சேரி அசோக்உ ள்ளிட்டோரும் தங்களது பகுதிக்குட்பட்ட இடங்களில் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

மதுரவாயலில் பகுதி செயலாளர் தேவதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அம்பத்தூரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத் தில் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் பங்கேற்றார்.

திருமங்கலத்தில் பகுதி செயலாளர் மோகன் தலைமையில் நடந்த மனித சங்கிலியில் வெங்கடேஷ் பாபு கலந்து கொண்டார்.

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 13 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. 128-வது வார்டுக் குட்பட்ட விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் விருகை ரவி தொண் டர்களுடன் கலந்து கொண்டார்.

இதுபோல மாநிலம் முழுவதும் ஒப்புக்கு சப்பானியாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சொற்ப அளவிலேயே அதிமுகவினர் கலந்துகொண்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள 82 மாவட்ட செயலாளர்களும் இன்று தங்களது பகுதியில் மனித சங்கிலி போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார்கள் என்றும், அனைத்து மாநகராட்சி பகுதிகள், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இன்று அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள் என்று அதிமுக தலைமை தெரிவித்து உள்ளது.