சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக, இப்போது, மாநிலத்தில் உள்ள  234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை திமுக தலைமை நியமனம் செய்துள்ளது.

முதலமைச்சர் மற்றும் திமுகழக தலைவர் அறிவுறுத்தலின்படி,  தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல்,  நீக்கல்  உள்ளிட்ட தேர்தல் பணிகளை பார்வையிட  தொகுதி மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய திமுக, அடுத்த நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இப்போதே களம் இறங்கி உள்ளது.  வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் திமுக உள்ளது.  அதற்கான ஏற்கனவே சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.

இந்த நிலையில், தற்போது   234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்தது திமுக தலைமைக் கழகம். பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல்/ நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட திமுகவில் தொகுதி பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி,  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செய்ய வேண்டிய மாற்றங்கள், கட்சி ரீதியாக செய்ய வேண்டிய சீரமைப்புகள் தொடர்பாக பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

[youtube-feed feed=1]