திருவண்ணாமலை
திருவண்ணாமலை கோவிலில் கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் சாமி தரிசனம் செய்தார்.

நேற்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திருக்கோவில் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.
அப்போது கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்,
“பருவமழை காலத்தில் பெய்யும் மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், நதிகளை இணைக்கும் முயற்சிகளை துணிச்சலாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்
என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel