டெல்லி: வடக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாக  இந்திய வானிலை மையம்  தெரிவித்து உள்ளது.

இந்திய வானிலை மையம்  இன்று (04/10/24) அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.  இதன் காரணமாக,  வடகிழக்கு இந்தியா, கேரளா & மாஹே, தமிழ் ஆகிய பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

இதன் காரணமாக  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் நாளையும், நாளை மறுதினமும் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மேகாலயாவின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மிகக் கடுமையான மழையுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்ருதுள்ளதுடன்,
அருணாச்சல பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் மழை; அஸ்ஸாம், துணை-இமயமலை மேற்குப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வங்காளம் & சிக்கிம், பீகார், தமிழ்நாடு, ராயலசீமா மற்றும் மராத்வாடா பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

Press Release 04-10-2024