டெல்லி: கூகுள் ‘குரோம்’ பயனர்களே எச்சரிக்கையாக இருங்கள்- நீங்கள் ஹேக்கர்களால் டிஜிட்டல் ஆபத்தை சந்திக்க நேரிடும் மத்தியஅரசு பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (The Indian Computer Emergency Response Team (commonly known as CERT-In),), Google Chrome பயனர்களுக்கு ஒரு முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை கூகுளின் இணைய உலாவியில் உள்ள குறிப்பிடத்தக்க குறைபாட்டை எடுத்துரைக் கிறது, இது ஹேக்கர்கள் பயனர்களின் தனிப்பட்ட தரவை அணுக அனுமதிக்கும் என குறிப்பிட்டுள்ளது.
இன்றைய உலகம் டிஜிட்டல் மயமாகி உள்ள நிலையில், அதன் வாயிலாக பல்வேறு முறைகேடுகளும், மோசடிகளும் அதிகரித்துள்ளன. பொதுவாக இணைய வழி பயனர்கள் அதிகம் பயன்படுத்துவது கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரையே. இதனால், பல ஹேக்கர்கள் இதன்மூலம் பயனர்களின் தரவுகளை திருடுவதில் ஆர்வம் கட்டி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) பயனர்கள் பாதுகாப்பாக குரோம் வழியாக இணையங்களில் உலாவும்போது எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக, இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு, இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப் பிரவுசர் சேவையான கூகுள் குரோம் (Google Chrome Web Browser) சேவையை பயன்படுத்தும் அணைத்து மக்களுக்கும் இந்த அவசர எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கூகுள் குரோம் பயனர்கள் ஹேக்கர்களால் சில டிஜிட்டல் ஆபத்துகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Google Chrome இல் உள்ள இந்த குறைபாட்டை ஹேக்கர்கள் தொலைதூரத்தில் இருந்து பயன்படுத்தி பயனர்களின் சாதனங்களை அணுகலாம் என்று எச்சரித்துள்ளது, இது தன்னிச்சையான குறியீட்டைப் பயன்படுத்தி பயன்பாடுகளை செயலிழக்கச் செய்யலாம், இதனால் கணினி பாதிக்கப்படலாம், அதனால் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.
இது சைபர் குற்றவாளிகளால் கூகுள் குரோம் பயன்படுத்தப்படும் சாதனங்களுக்குள் ஊடுருவப்பட்டு, அந்த சாதனத்தில் உள்ள தனிப்பட்ட தகவல்களை திருடி, அதை வைத்து பணம் கேட்டு மிரட்டும் அல்லது இணையத்தில் தனிப்பட்ட விபரங்களை விற்பனை செய்யப்படும் ஆபத்தான மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் புதிய சிக்கல் CERT-In மூலம் கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹேக்கர்கள் குரோம் பிரவுசர் வழியாக, அதாவது, ஸ்மார்ட்போன் (Smartphone), லேப்டாப் (Laptop) மற்றும் கணினி (Computers) உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் பயன்படுத்தும் போது பரவலாக டிஜிட்டல் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குரோம் பிரவுசரில் உள்ள குறைபாட்டைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் இந்த கூகுள் குரோம் அணுகும் தகவல் மட்டுமின்றி, சாதனங்களில் இருக்கும் பல்வேறு ஆப்ஸ்களில் இருக்கும் தகவல்களையும் திருட வாய்ப்புள்து என எச்சரித்துள்ளது.
கூகுள் குரோம் பரவலாக பயன்படுத்தப்படுவதால், விண்டோஸ், மாக்சோஸ் மற்றும் லினக்ஸ் தளங்களில் உள்ள பயனர்களுக்கு இந்த பாதிப்பு குறிப்பாக கவலைக்குரியது என்று CERT-In, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் பொருள் உலகளவில், ஆண்ட்ராய்டு, iOS மற்றும் தனிப்பட்ட கணினிகள் போன்ற அனைத்து வகையான சாதனங்களிலும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கை யிலான பயனர்கள் சாத்தியமான ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள்.
ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
ஆண்ட்ராய்டு அல்லது iOS சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், உடனே கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) சென்று, கூகிள் குரோமை அப்டேட் செய்ய அறிவுரைக்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட பிறகு, கூகுள் குரோம் ஆப்ஸை மீண்டும் ஒரு முறை கிளோஸ் செய்து ஓபன் செய்து பயன்படுத்த அறிவுரைக்கப்பட்டுள்ளது.
பிசி (PC), டெஸ்க்டாப் (Desktop) மற்றும் லேப்டாப் (Laptop) பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?
இதேபோல், பிசி பயனர்கள் கூகிள் குரோமைத் தொடங்கி, மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து “Settings” என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, “About Chrome” என்பதற்குச் சென்று அப்டேட்களைச் சரிபார்த்து, கிடைக்கக்கூடிய புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்து, பிறகு கூகுள் குரோமை க்ளோஸ் செய்து, மீண்டும் திறக்கவும். புதிய Google Chrome Update மூலம் இந்த ஆபத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
உங்களை சுற்றியுள்ளவர்கள், மற்றும் உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் உறவினர்கள் யாரும் கூகுள் குரோம் வெப் பிரௌசர் பயன்படுத்தினாலும், உடனே இந்த அப்டேட் குறித்த தகவலை தெரியப்படுத்தி, அவர்களையும் ஆபத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவுங்கள் மக்களே. இந்த தகவலை முடிந்த வரை மற்றவர்களுடன் பகிரும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.