திருப்பதி

சிறப்பு புலனாய்வுக் குழ் திருப்பதி லட்டு கலப்படம் குறித்த விசாரணையை நிறுத்தி வைத்துள்ளது.

ஆந்திராவில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதை பகிரங்கமாக தெரிவித்து முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.

இந்த குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

, லட்டு கலப்படம் குறித்து வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரிக்க 9 போ் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து சந்திரபாபு நாயுடு கடந்த மாதம் 26ம் தேதி உத்தரவிட்டார். கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி திருப்பதி திருமலையில் இந்தக் குழு விசாரணை மேற்கொண்டது.

நேற்று உச்சநீதிமன்றத்தில்ல் இது குறித்த விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ‘திருப்பதி லட்டில் கலப்படம் குறித்து கடந்த ஜூலை மாதம் ஆய்வு செய்து அதன் அறிக்கையை செப்டம்பர் மாதம் வெளியிட்டது ஏன்? பொறுப்பான பதவியில் இருக்கும் நீங்கள்(சந்திரபாபு நாயுடு) இந்த விவகாரத்தை நேரடியாக ஊடகங்களிடம் ஏன் எடுத்துச் சென்றீர்கள்? சிறப்பு விசாரணைக்குழுவை நியமித்துள்ள மாநில அரசு, அதன் அறிக்கை வருவதற்கு முன்னே ஊடகங்களில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?’

எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பிய முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மூத்த அதிகாரி துவாரகா திருமலை ராவ்,

”ஏற்கனவே நாங்கள் முதற்கட்ட விசாரணையை முடித்துவிட்டோம். இதுகுறித்து சிலரிடம் கருத்துகளை கேட்டு பதிவு செய்துள்ளோம். தற்போது இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருவதால் எங்கள் விசாரணையை வரும் 3ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளோம்”

என்று அறிவித்துள்ளார்.