சென்னை
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை பயன்படுத்துவது இல்லை என தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை கிண்டி இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து 28 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம்.
”இந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி தேசிய முதியோர் நல மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவில் வெளியிடங்களில் இந்த மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், ஒரு வளாகத்தில் சிறிய அளவில் தேசிய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் 8.64 ஏக்கர் பரப்பளவில் தேசிய நலவாழ்வு மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்படும் ஒரே முதியோர் நல மருத்துவமனை இது. 200 படுக்கை வசதி, 40 தீவிர சிகிச்சை படுக்கை வசதி உள்ளது.
தமிழகத்தில் தேசிய மருந்து தர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ள தரமற்ற 53
வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை.
தேர்தல் பிரமாண பத்திரம் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, நீதிமன்றத்தின் சட்ட விதிகளுக்குள் நுழைய தயாராக இல்லை”
எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]