சென்னை

மிழக துணை முதல்வர் நியமன அறிவிப்பு நாளை வருகிறது என மூத்த பத்திரிகையாளர் எஸ் பி, லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடக்கும் என்றும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக கடந்த இரண்டு மாதங்களாகவே செய்திகள் கசிந்து வருகின்றன. ஒவ்வொரு முறை செய்தி வேகமாக பரவும் போதும், அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுத்து வருகிறார்.

மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தனது எக்ஸ் தள பக்கத்தில்

 “நாளை நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போதே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக எந்தெந்த இலாக்காக்கள் ஒதுக்கப்படும்? இதற்காக துறைகளை இழக்கப்போகும் சீனியர்கள் யார் யார்? என்றெல்லாம் கடந்த சில வாரங்களாக வதந்திகள், கேள்விகள் உலா வந்தன.

சீனியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். “அப்படி யாருடைய துறையையும் பறித்து எனக்கு கூடுதலாக எந்தத் துறையும் வேண்டாம். இப்போதிருக்கும் விளையாட்டுத் துறையே போதும்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். வாரிசு என்பதால் ஆணவத்தையோ, அதிகார மமதையையோ காட்டாமல் தன்னடக்கத்தோடு உழைத்தால் தமிழக மக்கள் ரசிக்கவே செய்வார்கள்.

அந்தத் தடத்திலேயே பயணிக்க விரும்பும் உதயநிதிக்கு வாழ்த்துகள். ஆனாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் வசம் இப்போது வைத்துள்ள திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாகத் தர இருக்கிறார்கள். கற்றுக்கொள்ள நல்ல துறை. இதே தன்னடக்கத்தோடு, கூடுதல் உழைப்போடு புதிய பதவியைத் தொடர மீண்டும் வாழ்த்துகள்.”

என்று பதிந்துள்ளார்.