பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் இன்று காலமானார் அவருக்கு வயது 109.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்த பாப்பம்மாள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.
அதற்காக மத்திய அரசு 2021ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது.
தனக்கு சொந்தமான நிலத்தில் தள்ளாத வயதிலும் விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த பாப்பம்மாள் பாட்டி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று மாலை அவர் மரணமடைந்தார்.