காஞ்சிபுரம்

நாளை நடைபெற உள்ள திமுக பவள விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகள் காஞ்சிப்ரத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.

நாளை மாலை 5 மணிக்கு தி மு க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பவளவிழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி
திடலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தர் வரவேற்புரையாற்றுகிறார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார்.

கூட்டத்தில் திராவிடர் கழகத் ததைவர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர்மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மற்றும் எர்ணாவூர் நாராயணன், அதியமான், முருகவேல் ராஜன், திருப்பூர் அல்தாப், ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, பி.என்.அம்மாவாசி என முக்கியத் தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை அளிக்க உள்ளனர்.

திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சி என்பதால், திமுகவின் பவள விழா பொதுக்கூட்டம் கவனம் பெற்றுள்ளது. நாளை நடைபெற உள்ள 75வது ஆண்டு பவள விழா பொதுக் கூட்டத்திற்க்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுபொதுக்கூட்டத்திற்கு தேவையான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது  பந்தலில் 500 அடி நீளம், 250 அடி அகலமும் கொண்ட பந்தலில் சுமார் 25,000 மேற்பட்டோர் அமரலாம்.

தற்போது மேடைகள் அமைத்தல், மின்விளக்குகள் அமைத்தல், மின்விசிறி அமைத்தல், கட்டவுட் வைப்பதற்கான சாரம் கட்டுதல் போன்ற பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டி, தீவிரமாக நடைபெற்று வருவதுடன் பொதுக்கூட்ட முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் போன்று அலங்கரித்து, அண்ணா வீட்டிற்குள் வருவது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று முதலமைச்சர் ஸ்டாலின் வரும் வழியெங்கும் திமுக கொடிகள் நடப்பட்டுள்ளன.