சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காவல்துறை மரியாதையுடன் எஸ்றா சற்குணத்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

கடந்த 22-ந் தேதி இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியாவின் (இ.சி.ஐ.) பேராயருமான 86 வயதாகும் எஸ்றா சற்குணம், உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார்..
சென்னை வானகரத்தில் எஸ்றா சற்குணம் உடலுக்கு பொதுமக்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்றா சற்குணம் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இன்று அவரது உடல் கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]