டெல்லி

மோடிக்கு அரசியலில் இருந்து 75 வயதில் ஓய்வு அளிக்கப்படுமா என ஆர் எஸ் எஸ் தலைவருக்கு கெஜ்ரிவால் வினா எழுப்பி உள்ளார்

கடந்த 22-ந் தேதி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு 5 கேள்விகள் விடுத்தார். நேற்று அவர் மோகன் பகவத்துக்கு எழுதிய கடிதத்தில் மீண்டும் 5 கேள்விகளை எழுப்பி உள்ளார்.

கெஜ்ரிவால் அந்த கடிதத்தில்,

“பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். தேவையில்லை என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியது பற்றி என்ன கருதுகிறீர்கள்? 75 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற பாஜக விதிமுறை, அத்வானி, ஜோஷி ஆகியோருக்கு பயன்படுத்தப்பட்டது. பிரதமர் மோடிக்கும் அது பொருந்துமா?

கட்சிகளை உடைக்கவும், எதிர்க்கட்சி அரசுகளை கவிழ்க்கவும் விசாரணை அமைப்புகளைபாஜக பயன்படுத்துவது உங்களுக்கு ஏற்புடையதுதானா? ஊழல்வாதிகளைபாஜக சேர்த்துக் கொள்வதில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா? ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இருந்து பாஜக  வெளியேறுகிறதா?

இந்த கேள்விகள் ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் உள்ளன. இவற்றுக்கு மோகன் பகவத் சிந்தித்து பதில் அளிப்பார் என்று கருதுகிறேன். பாஜகவின் அரசியல் இதேபோல் நீடித்தால், நாடும், ஜனநாயகமும் முடிவுக்கு வந்து விடும்”

என்று தெரிவித்துள்ளார்.