காம்தார் நகர் பிரதான சாலை இனி எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான தமிழ் திரைப்படப் பாடல்களைப் பாடிய பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி.பி. அவரது கோடான கோடி ரசிகர்களால் ‘பாடும் நிலா பாலு’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
இவரது மறைவை அடுத்து இவர் நினைவாக அவர் வாழ்ந்த சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள காம்தார் நகருக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சார்பில் எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி. சரண் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.
எஸ்.பி. சரணின் இந்த கோரிக்கையை ஏற்று கா்தார் நகர் பிரதான சாலைக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என்று பெயர் மாற்றப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் “எஸ்.பி.பி-யின் ரசிகர்களில் ஒருவனாக அவரது நினைவு நாளில் இந்த அறிவிப்பை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]