டெல்லி
பாஜகவுக்கு கட்சி மாறிய ஆம் ஆத்மி எம் எல் ஏ சர்தார் சிங் தன்வார் பதவி நீக்கம் செயப்பட்டுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் டெல்லியின் சத்தர்பூர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் கர்தார் சிங் தன்வார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஜூலை மாதம் அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி மற்றொரு எம்.எல்.ஏ. ராஜ்குமார் ஆனந்துடன் பாஜகவில் இணைந்தார்.
தன்வாரை கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தகுதி நீக்கம் செய்ததாகவும், ஜூலை 10, 2024ம் தேதி முதல் அவரது சட்டசபை உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதாகவும் டெல்லி சட்டசபை செயலகம் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel