சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் ஹெரிடேஜ் புட் நிறுவனம் தெலுங்கானாவில் புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை நிறுவ உள்ளது.

இதற்கான ஒப்புதலை கடந்த வாரம் அந்நிறுவன இயக்குனர்கள் வழங்கியுள்ளனர்.

204 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள இந்த தொழிற்சாலை இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வரும் ஐஸ்கிரீம் தேவையை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

1996ம் ஆண்டு பங்குச் சந்தையில் நுழைந்த ஹெரிடேஜ் புட் நிறுவனம் தனது புதிய திட்டத்திற்கான நிதியை கடன் மற்றும் உள் வருவாயின் மூலம் பெற திட்டமிட்டுள்ளது.

2025ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது உற்பத்தியை துவக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நிறுவனம் தனது புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை தெலுங்கானா மாநிலம் ஷமீர்பேட்டில் அமைக்க உள்ளது.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கால்நடை தீவனம் ஆகிய வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. பால் பண்ணை பிரிவில். பால், பால் பொருட்கள், ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.