இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் சைப்ரஸ் நாட்டு வெளியுறவு அமைச்சரை இன்று சந்தித்து பேசினார்.

ஐநா பொது சபை உயர்மட்டக் குழுவின் 79வது கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அமெரிக்க சென்றுள்ள மத்திய அமைச்சர் ஜெய்ஷங்கர் அங்கு பல்வேறு நாட்டு பிரதிநிதிகளை சந்தித்தார்.

செப்டம்பர் 28ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ள ஜெய்ஷங்கர் அதன் ஒருபகுதியாக மற்ற நாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது சைப்ரஸ் நாட்டு வெளியுறவு அமைச்சரையும் சந்தித்த அவர் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

அங்கு நிகழ்வும் நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் ஜெய்ஷங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.