பெங்களூரு

ர்நாடக முதல்வர் சித்தராமையா தமக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக ஆளுநர் மூடா ‘முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து, முதல்வர்சித்தராமையா உயர்நீதிமன்றத்தில் அளித்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, முதல்-மந்திரி சித்தராமையாவின் வீட்டிற்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர்க வந்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வீட்டின் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறுகையில், முதல்வர்சித்தராமையா ராஜினாமா செய்யும் கேள்விக்கே இடமில்லை எனக் கூறி உள்ளார்.

முதல்வர் சித்தராமையா சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”நான் விசாரணைக்கு தயங்கமாட்டேன்.  இதுபோன்ற விசாரணை சட்டப்படி அனுமதிக்கப்படுகிறதா இல்லையா என்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அடுத்த சில நாட்களில் உண்மை வெளிவரும், 17ஏ-வின் கீழ் விசாரணை ரத்து செய்யப்படும் என்று நம்புகிறேன். இந்த அரசியல் போராட்டத்தில் மாநில மக்கள் எனக்கு ஆதரவாக நிற்கின்றனர். அவர்களின் ஆசீர்வாதமே எனது பாதுகாப்பு.

நான் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்தப் போராட்டத்தில் உண்மையே வெற்றி பெறும். பாஜக மற்றும் ஜேடி(எஸ்) -ன் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிரான எங்களது நீதி போராட்டம் தொடரும். நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் ஏழைகளுக்கு ஆதரவாகவும், சமூக நீதிக்காகவும் போராடி வருவதால், பாஜக மற்றும் ஜேடி(எஸ்) என் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது