சென்னை: திருப்பதி லட்டை போல பழனி பஞ்சாமிர்தத்தில் ஆண்மையை குறைக்கும் மாத்திரைகள் கலக்கப்பட்டு வருகிறது என்று சர்ச்சைக் குரிய வகையில் கருத்து தெரிவித்த இயக்குனர் மோகன்ஜி கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் பாஜக ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில், திமுக அரசின் நடவடிக்கை மற்றும் ஆட்சி அதிகாரங்களை எதிர்த்து கருத்து தெரிவிப்பவர்கள் உடனடடியாக கைது செய்யப் பட்டு வருகின்றனர். அதே வேளையில், மக்களுக்கு எதிரான கஞ்சா போன்ற போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுப்பதில் காவல்துறையினர் கவனம் செலுத்துவதில்லை. காவல்துறை ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக மாறி வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே உச்சநீதிமன்றம், அரசின் எந்த முடிவையும் விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளதுன், பேச்சுச் சுதந்திரம் பற்றிய கருத்துகளைப் பற்றி நமது காவல் துறைக்குக் கற்பிக்க வேண்டிய நேரம் இது என்று கடந்த மார்ச் மாதம் வழக்கு ஒன்றை விசாரித்தபோது கூறியது
இந்த நிலையில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக பேட்டியளித்திருந்த தமிழ் சினிமா இயக்குனரான மோகன் ஜி-யை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்த சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது தொடர்பாக தமிழ் சினிமா இயக்குனர் மோகன் ஜி தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அத்துடன், “நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலந்ததாக செவி வழிச் செய்தியாக கேள்விப்பட்டேன். அது தொடர்பான செய்தியை வெளியே வர விடாமல், வேறொரு வழக்கு போட்டு அதனை முடித்து விட்டார்கள். எனக்கு அங்கு வேலை செய்யும் மக்கள், கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக தெரிவித்தனர். அதில் வேலை செய்யும் யாரோ இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று கூறினர். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லா இடத்திலேயுமே நடக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக பேட்டியளித்திருந்த தமிழ் சினிமா இயக்குனரான மோகன் ஜி-யை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை அவரது காசி மேடு இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]