கொழும்பு

ன்று இலங்கை அதிபராக அனுர குமார திசநாயக பதவி ஏற்ற நிலையில் தினேஷ் குணவர்தனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்

கடந்த சனிக்கிழமையன்று இலங்கையில் 9வது அதிபர் தேர்தல் நடைபெற்றது. இது கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, இலங்கை சந்தித்த முதல் தேர்தல் ஆகும்.

தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிபர் தேர்தலுக்கு முன்னரே ஜே.வி.பி., எனப்படும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

அதைப் போல அவர் இந்த தேர்தலில் வெற்றிப் பெற்றார். இன்று அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்தண தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஏற்கனவே குணவர்தண தமது ராஜினாமா கடிதத்தை அதிபர் திசாநாயக்கவுக்கு அனுப்பியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  தற்போது 75 வயதான திரு குணவர்தன 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமராகப் பொறுப்பேற்றார்.