சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, இன்று இரவு மற்றும் நாளை இரவும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையிலான இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறு வதால் இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை(செவ்வாய்க்கிழமை) இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில், சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரெயிலும், திருவள்ளூரில் இருந்து சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரை வரும் ரெயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 4.05 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து இரவு 9.10, 10.10, 11 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில், பகுதிநேரமாக
சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.