இசிஐ திருச்சபையின் பேராயரும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தேசிய தலைவருமான பேராயர் எஸ்ரா சற்குணம் சென்னையில் இன்று காலமானார் (86).

எவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் (இசிஐ ) முதல் தேசியத் தலைவர் எஸ்ரா சற்குணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அரசியல் கட்சியினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய பிஷப் எஸ்ரா சற்குணம், இந்தியாவின் முதல் திருநங்கை போதகராக நியமிக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர்.
உடல்நலக் குறைவால் இன்று காலமான இவரது உடல் சென்னையில் வரும் செப். 26ம் தேதி அடக்கம் செய்யப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel