டெல்லி

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார்.

Delhi Chief Minister Arvind Kejriwal addresses a gathering during the Aam Aadmi Party ‘AAP’ public meeting, in Jaipur, Rajasthan, India, Monday, Sept. 4 ,2023. (Photo by Vishal Bhatnagar/NurPhoto via Getty Images)

அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.  மேலும் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 12-ந்தேதி ஜாமீன் வழங்கியது. மேலும் சி.பி.ஐ. அமைப்பு பதிவு செய்த வழக்கில், கெஜ்ரிவாலுக்கு கடந்த 13-ந்தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே கெஜ்ரிவாலை உச்சநீதிமன்ற்ம் ஜாமீனில் விடுவித்து திகார் சிறையில் இருந்து வெளிவந் கெஜ்ரிவால் ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார்.

டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி அறிவிக்கப்பட்டு அவர் முறைப்படி நேற்று பொறுப்பேற்று கொண்டார்.

இன்று டெல்லி ஜந்தர் மந்தரில்  நடந்த கூட்டத்தில்  டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,

“முதல்வர் பதவியை நான் ஏன் ராஜினாமா செய்தேன் என்றால், ஊழல் செய்வதற்காக அரசியலுக்கு நான் வரவில்லை. முதல்வர் பதவி மீது எனக்கு பேராசையில்லை. பணம் சம்பாதிப்பதற்காக நான் வரவில்லை. வருமான வரி துறையில் நான் பணியாற்றி உள்ளேன். நான் பணம் சம்பாதிக்க விரும்பியிருந்தால், கோடிக்கணக்கில் நான் சம்பாதித்திருக்க முடியும்.  நான் நாட்டுக்காக, பாரத மாதாவுக்காக, நாட்டின் அரசியலை மாற்றுவதற்காக, அரசியலுக்கு வந்தேன்”

என்று தெரிவித்துள்ளார்.