சென்னை: #Increase_Group4_Vacancy என்ற ஹாஸ்டாக் சமூக வலைதளத்தில்  டிரெண்டிங்கான நிலையில்,  குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்படும் என  டிஎன்பிஎஸ்சி  தெரிவித்துள்ளது.

குரூப் 4 காலி பணியிடங்களை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.

குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி 30-ல் தொடங்கி பிப். 28ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் காலி யாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9-ல் நடந்தது. சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 7,247 மையங்களில் 15.8 தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர்.

தேர்வுக்குப் பின் குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6,724ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், திமுக ஏற்கனவே கூறியபடி, காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக  சமூக வலைதளங்களில் #Increase_Group4_Vacancy டிரெண்டிங் செய்யப்பட்டது. மேலும், இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும், திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார்.

இதைத்தொடர்ந்து,  குரூப் 4 காலி பணியிடங்களை அதிகரிப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும்,  இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

குரூப்4 காலி பணியிடங்கள் விவகாரம்: திமுக அரசை கடுமையாக சாடிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…