சென்னை
முறையான அழைப்பு வந்தால் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் நடைபெற உள்ளது.
மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார், அவ்வகையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு விசிக அழைப்பு விடுத்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க பங்கேற்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
“விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு வந்தால் எங்கள் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.”
என்று கூறியுள்ளார்.