டெல்லி
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் புதிய அறிக்கையை வரும் 2 ஆம் தேதிக்குள் சமர்பிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
கொல்கத்தா நகரிலுள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டமும் வெடித்தது. காவல்துறையினர் மருத்துவமனையில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது..
இந்த கொலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. செப்டம்பர் 10 ஆம் தேதி மாலைக்குள் நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு, இளம் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டதுடன் மருத்துவா்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் அரசு சார்பில் துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுப்பதை தடுக்க முடியாது எனவும் எச்சாிக்கை விடுத்தனர்.
நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பயிற்சி மருத்துவர்கள் அறிவித்து அவர்கள். போராட்டம் தொடர்ந்து வருகிறது. இன்று, கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு நீதிபதி டிஒய் சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது புதிய நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.