டெல்லி: அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட  நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை டெல்லி திரும்பினார்.

காஷ்மீர் மற்றும் அரியான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் அவர் நாடு திரும்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கினற்ன.

முன்னதாக,  காங்கிரஸ் எம்.பி.யான  ராகுல்காந்தி கடந்த 6-ந்தேதி அதிகாலை டெல்லியில் இருந்து  திடீரென புறப்பட்டு  அமெரிக்கா சென்றார். அங்கு அவர் இந்தியாவுக்கு எதிரான மனநிலையில் உள்ள  சர்ச்சைக்கரிய சிலரை   சந்தித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், கடந்த   10-ந்தேதி வரை பல்கலைக் கழக மாணவர்களுடன் உரையாடல்  நடத்தினார். அப்போது இந்திய   பிரதமர் நரேந்திரமோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

அதுபோல மற்றொரு செய்தியாளர் சந்திப்பில், இண்டி கூட்டணி குறித்த கேள்விக்கு முறையான பதில் தெரிவிக்காமல் சொதப்பியதும் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. அதுபோல சீக்கியர்கள் குறித்து அவர் கூறிய உண்மைக்கு முரணான தகவல் சிக்கியர்களிடையே கடும் எதிர்ப்பை எழுப்பியது. டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர்.

நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்   ராகுலின் நடவடிக்கை, சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நாட்டி காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகி என அவரை பாஜக உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் தனது 10 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு  ராகுல்காந்தி இன்று காலை , டெல்லி திரும்பினார்.

இதைத்தெதாடர்ந்து அவர்  ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா சட்டசபை தேர்தல்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.