சென்னை: தமிழ்நாடு அரசுடன் டாடா நிறுவனம் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி,  தமிழ்நாட்டில் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டாடா நிறுவனம்  ஜாகுவார் கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 28ந்தேதி  அடிக்கல் நாட்டுகிறார் .

அத்துடன்  மெகா காலணி உற்பத்தி பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழ்நாட்டுக்கு தேவையான  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு  பயன் சென்றிருந்த நிலையில், சான்பிரான்சிஸ்கோ நகரில்,  டிரைவரே இல்லாத ஆட்டோமேட்டிக் ஜாகுவார் காரில் பயணம் செய்தார்.  இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாபனது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா நிறுவனம் ஜாகுவார் கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க உள்ளது.  ராணிப்பேட்டையை படுத்த  பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடியில் டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது. இங்கு ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி செய்யப்பட உள்ளது.  இநத் கார் உற்பத்தி ஆலையின் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன்,   பனப்பாக்கத்தில் 250 ஏக்கரில் ரூ.400 கோடியில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

இந்த இரு தொழிற்சாலைகளையும்,  வரும் 28ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.