விளையாட்டு வீரர்களுக்கான உணவுப் பொருட்களில், தடைசெய்யப்பட்ட பொருட்கள் குறித்து இனி, குஜராத், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள நர்கோடிக் மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையத்தில் (CERANS) சோதனை மேற்கொள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)க்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

FSSAIன் இந்த நடவடிக்கை “விளையாட்டு வீரர்களுக்கான உணவு” என வகைப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியால் (WADA) தடைசெய்யப்பட்ட பொருளை முற்றிலும் தடை செய்வதன் அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது.

உலக ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியால் ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி வெளியிடப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை உணவு வணிக ஆபரேட்டர் (FBO) சரிபார்க்க வேண்டியது அவசியம்.

“ரசாயனம்”, “ரசாயன-ஊட்டச் சப்ளிமெண்ட்” என்று முத்திரையிடப்பட்ட இவ்வகை உணவுகளில் WADA-வால் தற்போது தடை செய்யப்பட்டுள்ள 76 வகை பொருட்களை சோதனை செய்ய CERANS மையத்துக்கு சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியம் (NABL) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

WADA-வால் தடைசெய்யப்பட்ட இரசாயனங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த, உணவுப் பாதுகாப்புத் துறை இப்போது CERANS ஐப் பயன்படுத்தி “விளையாட்டு வீரருக்கான உணவு” தயாரிப்புகளை சோதிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விளையாட்டு வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் இதுபோன்று வகைப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொண்டு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களின் ஆரோகியத்தையும் உறுதிப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.