சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில், நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏடிஎம் இயந்திரல் உள்ள  ஒலித்த  காரணத்தால் கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான  ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை மர்ம நபர்கள்  நேற்று  (ஞாயிற்றுக் கிழமை)  இரவு கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளனர். நகரின் முக்கிய பகுதியான  ராகவன் தெருவின் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் ஏடிஎம் சேவை மையம் உள்ளது. இந்த நிலையில், நள்ளிரவில் மக்களின் நடமாட்டம் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று இயந்திரத்தீன் கீழே உள்ள பணம் வைக்கப்படும் பகுதியை உடைக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள  இயந்திரம் எச்சரிக்கை ஒலி எழுப்பியது. இதனால், கொள்ளையர்கள்  கொள்ளை முயற்சியை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

அலாரம் சத்தம் காரணமாக அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஏடிஎம் இயந்திரம் அருகே கூடினர்.  அங்கு வந்து பார்த்தபோது, பணத்தை டெபாசிட் செய்யும் இயந்திரத்தை ஆயுதங்களால் சுக்குநூறாக உடைத்த நிலையில் காரணப்பட்டதும்.

இதுகுறித்து உடனே வங்கிக்கும், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த  பெரம்பூர் செம்பியம் காவல் நிலைய போலீசார் விரைந்து ஆதாரங்களை கைப்பற்றினர். மேலும், ஏடிஎம் மையத்தின் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ள மர்ம நபர்களின் அடையாளங்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.