ராஞ்சி

ன்று 6 வந்தே பாரத் ரயில் சேவையைஇ பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

தற்போது பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் சென்றுள்ளார்.  அங்கு பிரதமர் மோடி, புதிதாக 6 வந்தே பாரத் ரயில்களின் சேவையை இன்று தொடங்கி வைத்துளார்.  இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயில்கள் கீழ் கண்ட வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

டாடாநகர்-பாட்னா,

பிரம்மபூர்-டாடாநகர்,

ரூர்கேலா-ஹவுரா,

தியோகர்-வாரணாசி,

பாகல்பூர்-ஹவுரா

கயா-ஹவுரா

பிரதமர் அலுவலகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் புதிய வந்தே பாரத் ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தினமும் ரயில்களில் சென்று வரும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சொகுசான வசதி அளிக்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. வேகமான பயணம், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த வசதிகள் ஆகியவற்றை தரும் நோக்கத்துடன் இந்த ரெயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 54 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிதாக 6 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.

Today, PM Modi, Vande bharat, 6 new services,

[youtube-feed feed=1]