அதானி நிறுவன ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்றிரவு ஹிண்டன்பெர்க் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பணமோசடி மற்றும் பங்குப்பத்திர மோசடி தொடர்பாக அதானி நிறுவனத்தின் மீது 2021ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை அடுத்து இந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சுவிஸ் வங்கி கணக்குகளில் $310 மில்லியன் (இந்திய மதிப்பில் ₹2600 கோடி) பணம் பதுக்கிவைக்கப்பட்டதாகக் கூறி அதானி நிறுவனத்துக்கு சொந்தமான 6 சுவிஸ் வங்கி கணக்குகளை அந்நாட்டு அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை 2021ம் ஆண்டு அதாவது அதானி நிறுவனம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளிவருவதற்கு பல ஆண்டுகள் முன்பே துவங்கப்பட்டது என்பதை அது தெளிவுபடுத்தியுள்ளது.

அதானி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நாட்டு விதிமுறைகளை மீறி பணமோசடியில் ஈடுபட்டு வருவதும் அதனால் அந்நாட்டில் உள்ள அதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதும் அந்நிறுவனத்தின் மீதான மதிப்பை குறைத்துள்ளது.

இதனால், இந்திய பங்குச் சந்தையில் அதானி நிறுவன பங்குகள் இன்று பெரும் சரிவை சந்தித்து வருகிறது.