கொல்கத்தா:  உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும், கொல்கத்தா மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற  மறுத்து விட்ட நிலையில்,  “மக்களின் நலனுக்காக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாராகவே இருக்கிறேன்” என மம்மா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.

மம்தா பானர்ஜியின் அகங்கார ஆட்சி காரணம் மேற்குவங்க மாநிலம் சீரழிந்து வருகிறது. சமீபத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ,  பாதிப்பு நடைபெற்ற தனியார் மருத்துவமனைக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.  இந்த விவகாரத்0தல் நீதி வேண்டும் என வலியுறுத்தி மேற்குவங்கம் உள்பட நாடு முழுவதும் மருத்துவர்கள் பொங்கியெழுத்து போராட்டம் நடத்திய நிலையில்,  மம்தாவும், தானும் நீதி கிடைக்க வேண்டும் என கூறி தனது தலைமையின்கீழ் உள்ள அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார். தனது அரசுக்கு எதிராக  ஒரு மாநில முதல்வரே போராட்டம் நடத்தியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. போராட்டத்தை திசை திருப்ப மம்தா நாடகம் ஆடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சர்ச்சைக்குரிய ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதிபதி  அந்த மருத்துவமனையின் மருத்ருவர்கள் கடந்த  33 நாட்களாகவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுகாதாரத் துறையின் தலைமையகமான கொல்கத்தாவில் உள்ள ஸ்வஸ்த்யா பவன் முன்பு ஆயிரக்கணக்கான ஜூனியர் டாக்டர்கள் செவ்வாய்க்கிழமை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் எச்சரித்த நிலையில், தங்களது பணியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம், ஆனால் நீதி கிடைக்கும்வரை  போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறி வருகினற்னர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள்,  பேச்சுவார்த்தைக்கு வருமாறு  மேற்கு மாநில தலைமைச் செயலர் மனோஜ் பந்த், ல் மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்தார்.  மாலை 6 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு 12 முதல் 15 மருத்துவர்கள் குழுவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால், மருத்துவர்கள் அளித்த பதிலில், “குறைந்தபட்சம் 30 பிரதிநிதிகள் அடங்கிய குழுவை சந்திக்க அனுமதிக்க வேண்டும். முதல்வர் மம்தா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். பெண் மருத்துவர் கொலையில் தொடர்புடைய மற்றும் ஆதாரங்களை அழித்த அனைவரையும் தண்டிக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்தனர்.

இந்த நிபந்தனைகளை மேற்குவங்க அரசு ஏற்க மறுத்து வருகிறது. இருந்தாலும் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பேச்சுவார்த்தை வர வேண்டும் என கூறி அவர்களுடன் பேச தான் தயாராக இருப்பதாக  முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைச் செயலகத்தில் காத்திருந்தார். ஆனால் தலைமைச் செயலகம் வரை வந்த மருத்துவர்கள் குழு, திடீரென குழு முதல்வரை சந்திக்காமலேயே திரும்பிவிட்டது. அவர்களுடக்கு  அங்கு என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா,   ”எனக்கு முதல்வர் பதவி வேண்டாம். எங்கள் அரசாங்கம் நிறைய அவமானங்களை பார்த்து விட்டது. நடந்து வரும் போராட்டங்களில் அரசியல் சாயம் கலந்திருக்கிறது.

நீதிவேண்டி மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். மக்களின் நலனுக்காக நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாராகவே இருக்கிறேன். ஆனால் என்னுடைய எதிரிகள் என்னுடைய நாற்காலியைத்தான் குறிவைத்திருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்

மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் 2 மணி நேரங்களுக்கு மேலாக காத்திருக்கிறோம். நாங்கள் திறந்த மனதுடன் அவர்களுடன் கலந்துரையாட விரும்புகிறோம்.

இந்த போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து இதுவரை 27 நோயாளிகள் இறந்துள்ளனர். பெரும்பாலான மருத்துவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் ஒருசிலர் மட்டுமே அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது”

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.