ட்ச்

குஜராத் மாநிலத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள லக்பத் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு மழை பெய்த நிலையில், தற்போது மர்ம காய்ச்சல் பரவி வருகிறது  இந்த மர்மக் காய்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 12 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதே வேளையில் அப்பகுதியில் வரும் இந்த காய்ச்சல் எந்த வகை என மருத்துவர்களால் துல்லியமாக கண்டறிய முடியவில்லை. இந்தக் காய்ச்சலைன் அறிகுறிகளாக சளி, இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் 22 கண்காணிப்பு குழுக்கள், மருத்துவர்கள் இணைந்து தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.