சேலம்

நேற்று சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நில அதிர்வு ஏற்பட்டது,  இதனால் மக்கள் கடும் அச்சமடைந்தனர்  பிறகு சிறிது சிறிதாக பொதுமக்கள் அந்த அச்சத்தில் இருந்து மீண்டு வந்தனர்.  ஆயினும் மக்களில் பலர் இன்னும் சேலத்தில் நில நடுக்க அபாயம் உள்ளதாக் எண்ணி வருகின்றனர்

நேற்று மதியம் சேலம் மாவட்டம் ஏற்காடு, குப்பனூர், வாழப்பாடி, அயோத்தியா பட்டணம், ஓமலூர், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெடி வெடிப்பது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. பொதுமக்கள் இதனால் பீதி அடைந்தனர். பலர் நில அதிர்வு காரணமாக சத்தம் ஏற்பட்டதா என பலர் சந்தேகம் தெரிவித்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வானிலை மற்றும் நில அதிர்வு கண்காணிப்பகத்தில் இருக்கும் ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வுக்கான தரவுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், சத்தம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ள்னர்.