சென்னை: வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில்,  பேரிடர் காலிங்களில் விரைவான மீட்புபணிகளை மேற்கொள்ளும் வகையில்   ரூ.10 கோடி செலவில் தொலைத்தொடர்பு வசதிகள் மேற்கொள்ள  சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

பருவமழை காலம் மற்றும் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை மக்களை  காப்பற்றா தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு மீட்பு பணிகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மழைநீர் வடிகால் காவல்வாய்கள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளதுடன், பழைய கால்வாய்களும் தூர் வாரப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தற்போது, ரூ.9 கோடியே 30 லட்சம் செலவில்  தொலை தொடர்பு கட்டமைப்புகளை, காவல்துறை உதவியுடன் ஏற்படுத்திக்கொள்ள  முடிவு செய்துள்ளது.

இதுவரை,  சென்னை மாநகராட்சி தொலைத்தொடர்பு கட்டமைப்பைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் அனலாக் முறை தனியார் நிறுவனத்திடம் இருந்து பெற்று வருகிறது. இதன் மூலம் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதை மாற்றி முழுமையாக மாநகராட்சியே நிர்வகிக்கும் வகையில்  கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவை கட்டமைப்பை டிஜிட்டல் முறைக்கு மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான கட்டமைப்பை மாநகராட்சி நிர்வாகமே சொந்தமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

இதற்காக மத்தியஅரசிடம் இருந்து   10 இணை அலைவரிசைகளை மாநகராட்சி வாங்க இருக்கிறது. மேலும், 10 இடங்களில் டவர்களையும் நிறுவ உள்ளது. அத்துடன், பேரிடர்காலங்களில் அதிகாரிகள், பேரிடர் மீட்பு குழுவினர்ப யன்படுத்தும் வகையில், புதிதாக 1,200  அதிநவீன வாக்கி டாக்கிகளும் வாங்கப்பட உள்ளன.

இதற்காக தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக காவல்துறையிடமிருந்து 6 அலுவலர்களும் அழைக்கப்பட உள்ளனர். இதன் மூலம் மாநகராட்சியின் தகவல் தொடர்பு வலிமை பெறும். பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..