மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்ட 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை கடந்த 26ம் தேதி சரிந்து விழுந்தது.
2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த சிலை விழுந்து நொறுங்கியதை அடுத்து காங்கிரஸ் மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சியினர் பாஜக மற்றும் ஆளும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கூட்டணி மீது சரமாரி குற்றச்சாட்டு வைத்தனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பிரதமரை வைத்து இந்த சிலை திறப்பு ஈவென்ட் நடத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதுடன் இதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டம் தனவு பகுதியில் வாத்வான் ஆழ்கடல் துறைமுக பணிகளை துவக்கி வைத்தார்.
வாத்வான் துறைமுக பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவின் போது பேசிய பிரதமர் மோடி, “சத்ரபதி சிவாஜி எங்களுக்கு வணங்கத்தக்க கடவுள் நான் திறந்து வைத்த சிவாஜி சிலை உடைந்ததற்காக அவர் காலில் தலை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.