திருப்பதி

திருப்பதி கோவிலில் லட்டு வாங்க ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது.

தினாரி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த லட்டு பிரசாதத்தை ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் தயாரித்து வருகின்றனர்.

கோவிலில் தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தவிர கூடுதல் லட்டு வேண்டும் என்பவர்கள் லட்டு கவுன்டரில் நேரில் சென்று, ரூ.50 செலுத்தி லட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம். தற்போது இந்த நடைமுறையே வழக்கத்தில் இருந்தாலும் இடைத்தரகர்கள் மூலம் லட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

எனவே இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டவெளியிட்டுள்ள அறிக்கையில்,

”திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு வாங்க இன்று முதல் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆகும். சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல லட்டு விற்பனை செய்யப்படும். சாமி தரிசனம் செய்யாமல் லட்டு மட்டும் வாங்க வரும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் ஒரு ஆதாருக்கு கூடுதலாக 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும்”

என தெரிவிக்கப்பட்டுள்ளது.