ஐசிசியின் புதிய தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக செயல்பட்டு வந்த நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே, ஐசிசி ஒளிபரப்பு உரிமையாளருடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேட்புமனுக்கள் வரவேற்கப்பட்டது.
வேட்புமனுவுக்கான கடைசி தேதியான இன்றுவரை இந்த பதவிக்கு பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வரும் ஜெய் ஷாவை தவிர்த்து தகுதியான வேறு யாரும் விண்ணபிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ICC வரலாற்றில் மிக இளம் வயதில் தலைவராக நியமிக்கப்பட்ட நபர் எனும் பெருமையை பெற்றுள்ள ஜெய் ஷா வரும் டிசம்பர் 1ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.