டெல்லி

காராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. சென்ற ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி கடற்படை தினத்தில் பிரதமர் மோடியால் இந்த சிலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. நேற்று இந்த 35 அடி உயர சிலை இன்று மதியம் 1 மணியளவில் திடீரென உடைந்து விழுந்தது.

இந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் சிலை உடைந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

காங்கிரஸ் கட்சி தன்னுடைய எக்ஸ் தளத்தில்,

”பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது. கடந்த  2023-ம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மகாராஷ்டிரா ராஜ்கோட்டில் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்துள்ளது. பாஜகவின் ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள் கூட தப்பவில்லை”

எனப் பதிவிட்டுள்ளது.